பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் 'herSTART 5.0' திட்டம் குஜராத்தின் அகமதாபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை குஜராத் பல்கலைக்கழக ஸ்டார்ட்அப் மற்றும் தொழில்முனைவுக் குழு (Gujarat University Startup and Entrepreneurship Council) செயல்படுத்துகிறது. இதன் கீழ் பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அடைகாப்பு (incubation) ஆதரவு, வழிகாட்டுதல், சந்தை அணுகல் ஆகியவை வழங்கப்படுகின்றன. ஸ்டார்ட்அப் சூழலில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதே இந்த ஐந்தாவது பதிப்பின் நோக்கம்.