இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம், 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்காக 1855 என்ற உதவி எண்ணை நாடு முழுவதும் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. கணக்கெடுப்புப் பணி தொடர்பான குடிமக்களின் சந்தேகங்களுக்கு உதவுவதற்காக இந்த உதவி எண் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது; பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தும் பொறுப்பு இதனுடையது. 2011-க்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027 கணக்கெடுப்பாகும்.