குழந்தைகளுக்கான நீரிழிவு நோய் (Diabetes Mellitus) குறித்த இந்தியாவின் முதல் வழிகாட்டு ஆவணத்தை ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பிறப்பு முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பரிசோதனை, நோயறிதல், சிகிச்சை, நீண்டகால மேலாண்மை ஆகியவற்றுக்கான தேசியக் கட்டமைப்பை இது வழங்குகிறது. அரசு சுகாதார நிலையங்களில் பரிசோதனை, இன்சுலின் சிகிச்சை, குளுக்கோமீட்டர்கள், சோதனைப் பட்டைகள், தொடர் கவனிப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். சமூக அளவிலான பரிசோதனை முதல் மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் வரை தொடர் கவனிப்பு உறுதிசெய்யப்படும். டைப் 1 நீரிழிவை முன்கூட்டியே கண்டறிய '4T' அறிகுறிகள் - அடிக்கடி சிறுநீர் (Toilet), தாகம் (Thirsty), சோர்வு (Tired), எடை குறைதல் (Thinner) - பயன்படுத்தப்படுகின்றன.