வளர்ந்த பாரதம் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் (கிராமப்புறம்) [VB-G RAM G] சட்டம், 2025-ன் கீழ் 375 அனுமதிக்கப்பட்ட பணிகளின் பட்டியலை அரசு அறிவித்துள்ளது. இது முன்பு அனுமதிக்கப்பட்ட 266 பணிகளைவிட 41% அதிகம். இப்பணிகள் நீர்ப் பாதுகாப்பு, அடிப்படை ஊரகக் கட்டமைப்பு, வாழ்வாதாரம் சார்ந்த கட்டமைப்பு, தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கைக்கான சிறப்புப் பணிகள் என நான்கு தூண்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தடுப்பணைகள், நீர்செறிவுக் குழிகள், உட்செலுத்துக் கிணறுகள், ஆறு புத்துயிரூட்டல் உள்ளிட்ட 128 பணிகளுடன் நீர்ப் பாதுகாப்பே மிகப் பெரிய தூணாகும். திட்டங்கள் 'வளர்ந்த கிராம ஊராட்சித் திட்டம்' (Viksit Gram Panchayat Plan) மூலம் வகுக்கப்பட்டு கிராம சபையால் ஒப்புதல் அளிக்கப்படும். ஊரக வேலைவாய்ப்பை நீர்ப் பாதுகாப்பு, கட்டமைப்பு, வாழ்வாதாரம், காலநிலை மீள்திறன் ஆகியவற்றுடன் இணைப்பதே இதன் நோக்கம்.