பாதுகாப்பற்ற பூச்சிக்கொல்லி எச்சங்கள் காரணமாக M/s நீலகிரி ஆயில் & அலைட் இண்டஸ்ட்ரீஸ் தயாரித்த ஷாலிமார் செஃப்–கொத்தமல்லித் தூளையும், பாதுகாப்பற்ற காட்மியம் அளவு காரணமாக M/s அக்வாக்ரி பிராசசிங் பிரைவேட் லிமிடெட் தயாரித்த கேரஜீனனையும் திரும்பப் பெற இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006-இன் கீழ், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவுத் திரும்பப்பெறும் நடைமுறை) விதிமுறைகள், 2017-இன்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.