பயணத் தளமான ஃபெர்ன்வேயர் (Fernwayer) சார்பில் தயாரிக்கப்பட்ட 'நட்பார்ந்த நகரங்கள் குறியீடு 2026' (Friendliest Cities Index 2026) தரவரிசையில், 100-க்கு 95 மதிப்பெண் பெற்ற மெக்சிகோவின் மெரிடா உலகின் மிக நட்பான நகரமாகத் தேர்வானது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ (94.9) இரண்டாம் இடத்தையும், கொலம்பியாவின் பொகோட்டா (94.5) மூன்றாம் இடத்தையும் பெற்றன. போட்ரம், மான்செஸ்டர், ஹாம்பர்க், பெர்த், சாவோ பாலோ, மெக்சிகோ சிட்டி, நாஷ்வில் ஆகிய நகரங்களும் முதல் 10-க்குள் இடம்பிடித்தன. மறுமுனையில், 43.6 மதிப்பெண் பெற்ற தில்லி மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற 10 நகரங்களுள் ஒன்றானது; அர்ஜென்டினாவின் புவனோஸ் அயர்ஸ் 42.0 மதிப்பெண்ணுடன் கடைசி இடத்தைப் பெற்றது. குடியிருப்போரின் நட்புணர்வு, வரவேற்கும் பண்பு, விருந்தோம்பல் பற்றி இணையத்தில் பதிவான கருத்துகளே இத்தரவரிசைக்கு அடிப்படை; எனவே ஒரு நகரில் வசிக்கும் அனைவரும் நட்பற்றவர்கள் என்று இது பொருள்படாது.