இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 2–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்திய மகளிர் ஹாக்கி அணி FIH நேஷன்ஸ் கோப்பை 2026-ஐ வென்றது.
நேஷன்ஸ் கோப்பைத் தொடரைக் கள ஹாக்கியின் சர்வதேச நிர்வாக அமைப்பான சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (FIH – Fédération Internationale de Hockey) நடத்துகிறது. இந்த வெற்றி இந்திய மகளிர் ஹாக்கிக்குப் பெரும் ஊக்கமாகவும், சர்வதேசப் போட்டிகளில் அணியின் வளர்ந்து வரும் வலிமையின் பிரதிபலிப்பாகவும் அமைகிறது.