உலக நீரிழிவு நோய் தினம் – நவம்பர் 14
உலக நீரிழிவு நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. நீரிழிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆரம்பநிலையிலேயே கண்டறிதல், உரிய நேரத்தில் சிகிச்சை பெறுதல், தரமான சுகாதாரச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துதல் ஆகியவை இதன் நோக்கங்கள்.