நுண் அணு உலையை முதன்முறையாக விமானம் மூலம் கொண்டுசென்றது அமெரிக்கா
அமெரிக்கா முதன்முறையாக ஒரு நுண் அணு உலையை (micro nuclear reactor) ராணுவச் சரக்கு விமானத்தில் வான்வழியாகக் கொண்டுசென்றுள்ளது. நுண் அணு உலைகள் சிறிய, மேம்பட்ட அணுமின் அலகுகள்; இவை பொதுவாக 10 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. சிறிய அளவு காரணமாக, மின்சாரம் தேவைப்படும் இடத்துக்கு இடம்பெயர்க்கக்கூடிய எடுத்துச்செல்லத்தக்க ஆற்றல் மூலமாக இவை கருதப்படுகின்றன.