THE ஆசிய பல்கலைக்கழக தரவரிசை 2026: இந்தியாவிலிருந்து ஐஐஎஸ்சி (IISc) பெங்களூரு முதலிடம்!
THE ஆசிய பல்கலைக்கழக தரவரிசை 2026: இந்தியாவின் பங்களிப்பு அதிகரிப்பு டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் (THE) வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான ஆசிய பல்கலைக்கழக தரவரிசையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு ஐஐஎஸ்சி (IISc) நிறுவனம் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. ஆசிய அளவில் இது 43-வது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த 2025-ல் 38-வது இடத்தில் இருந்த இது, தற்போது 50 இடங்களுக்குள் இருக்கும் ஒரே இந்திய நிறுவனம் ஆகும்.