மாபெரும் முக்கோணவியல் அளவை (GTS) நிலையங்களை ஐந்து தொகுதிகளாக ஆவணப்படுத்தியது தமிழ்நாடு
தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித் திட்டத் துறையும், தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறையும் இணைந்து மாநிலத்தில் உள்ள மாபெரும் முக்கோணவியல் அளவை (Great Trigonometrical Survey – GTS) நிலையங்களை ஆவணப்படுத்தி, அவ்விவரங்களை ஐந்து தொகுதிகளாக வெளியிட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட நிலையங்கள், அவற்றின் அளவைகள், புவியியல் ஆயத்தொலைவுகள் ஆகிய விவரங்கள் இத்தொகுதிகளில் உள்ளன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், 1802 ஏப்ரல் 10 அன்று சென்னை புனித தோமையார் மலையில் (St.