முதியோர் நல மேம்பாடு: முதியோர்களுக்கான பிரத்தியேக ‘ஜீவன்’ (JEEVAN) மொபைல் செயலி மற்றும் ‘சதாயு’ (SHATAYU) டேஷ்போர்டு தொடக்கம்!
முதியோர் சமூகப் பாதுகாப்புச் சீர்திருத்தம்: முதியோரின் ஆரோக்கியம் மற்றும் ஓய்வூதிய விவரங்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் புதிய டிஜிட்டல் தளம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் முதியோர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப, அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவத் தேவைகளை ஒரே குடையின்கீழ் கொண்டுவரும் நோக்கில், மத்திய அரசு இரண்டு புதிய அதிநவீன டிஜிட்டல் தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை 'ஜீவன்' (JEEVAN) மொபைல் செயலி மற்றும் 'சதாயு' (SHATAYU) நிர்வாகத் தரவுத் தளம் (Dashboard) ஆகும்.