இந்தியத் தேர்தல் ஆணையம், புது டெல்லி பாரத் மண்டபத்தில் மாநிலத் தேர்தல் ஆணையர்களுடன் தேசிய வட்டமேசை மாநாட்டை நடத்தியது. 27 ஆண்டுகளில் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்; இதற்கு முந்தைய மாநாடு 1999-இல் நடைபெற்றது. நாடாளுமன்றம், மாநிலச் சட்டமன்றங்கள், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது; ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கான தேர்தல்களை மாநிலத் தேர்தல் ஆணையங்கள் நடத்துகின்றன. தேர்தல் நடத்துவது தொடர்பான கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள இவ்விரு அமைப்புகளுக்கும் இக்கூட்டம் பொதுத் தளமாக அமைந்தது.