அசாமின் அகர் மரப் (Agarwood) பொருட்களுக்கான ஏற்றுமதி மையமாகக் குவாஹாட்டி சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்குநரகம் (DGFT) ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், பொருந்தும் ஏற்றுமதி விதிகள் மற்றும் அழிவின் விளிம்பிலுள்ள காட்டு விலங்கு, தாவர இனங்களின் சர்வதேச வர்த்தக உடன்படிக்கை (CITES) அனுமதிகளுக்கு உட்பட்டு, அகர் எண்ணெய், அகர் சில்லுகள் மற்றும் தொடர்புடைய பொருட்களை நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். இந்தியாவின் அகர் மர உற்பத்தியில் சுமார் 81% அசாமில் நடைபெறுகிறது. கோலாகாட் மாவட்டத்தின் அகர் மரப் பொருட்கள் 'ஒரு மாவட்டம் ஒரு பொருள்' (ODOP) முன்முயற்சியின் கீழ் வருகின்றன. அக்விலேரியா மரத்தின் உள்வயிரத்தில் பூஞ்சை தொற்றும்போது பிசின் உருவாகி, மரம் கருமையாகவும் அடர்த்தியாகவும் மாறுவதால் அகர் மரம் உருவாகிறது.