2026 பிப்ரவரி 4 முதல் 10 வரை கொழும்பு கங்காராமய ஆலயத்தில் பொதுமக்கள் வழிபாட்டுக்காகத் தேவ்னிமோரி புத்தர் புனிதச் சின்னங்களை (relics) இந்தியா இலங்கைக்கு அனுப்பியது. வதோதராவிலுள்ள மகாராஜா சயாஜிராவ் பரோடா பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் இவை, 1957-இல் குஜராத்தின் ஆரவல்லி மாவட்டம் தேவ்னிமோரியில் அகழ்ந்தெடுக்கப்பட்டவை. இவற்றின் பேழையில் பிராமி எழுத்தில், சமஸ்கிருத மொழியில் கல்வெட்டுகள் உள்ளன. இக்கண்காட்சி இந்தியா–இலங்கை இடையிலான பௌத்தப் பண்பாட்டுப் பிணைப்பை எடுத்துக்காட்டுகிறது.