புது தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் (CSIR-NPL) தேசிய சுற்றுச்சூழல் தர ஆய்வகம் (National Environmental Standard Laboratory - NESL) திறக்கப்பட்டுள்ளது. இது இந்திய வானிலைச் சூழல்களுக்கு ஏற்ப காற்று மாசு கண்காணிப்புக் கருவிகளைச் சோதித்து, அளவுத்திருத்தம் செய்து, சான்றளிப்பதுடன், அவற்றுக்கான இந்தியத் தரநிலைகளையும் நிர்ணயிக்கும்; இது தேசிய தூய காற்றுத் திட்டத்திற்கு (National Clean Air Programme) துணைபுரிகிறது. இதுபோன்ற தேசிய அளவிலான ஆய்வகம் ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமே உள்ளதால், இந்தியாவின் ஆய்வகம் உலகில் இரண்டாவது ஆகும்.