விண்வெளி ஆராய்ச்சிக்கான பங்களிப்புக்காக வானியற்பியலாளர் அன்னபூர்ணி சுப்பிரமணியத்துக்கு COSPAR விக்ரம் சாராபாய் பதக்கம் 2026 வழங்கப்பட்டுள்ளது.
டாக்டர் விக்ரம் சாராபாயின் நினைவாக 1990-இல் நிறுவப்பட்ட இப்பதக்கம், விண்வெளி ஆராய்ச்சிக் குழு (COSPAR) மற்றும் ISRO இணைந்து வளரும் நாடுகளின் விஞ்ஞானிகளுக்கு வழங்குகின்றன. இதனைப் பெறும் 4-வது இந்தியர், முதல் இந்தியப் பெண் மற்றும் ஒட்டுமொத்தமாக 3-வது பெண் இவராவார். யு.ஆர். ராவ் (1996), குர்பக்ஸ் சிங் லக்கினா (2014), அனில் பரத்வாஜ் (2024) ஆகியோர் முன்னர் இதனைப் பெற்ற இந்தியர்கள்.