முப்படைத் தலைமைத் தளபதி (Chief of Defence Staff - CDS), இராணுவக் குவாண்டம் இயக்கக் கொள்கைக் கட்டமைப்பை (Military Quantum Mission Policy Framework) வெளியிட்டார். இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் கூட்டு ஏற்பின் மூலம் குவாண்டம் தொழில்நுட்பங்களை இந்திய ஆயுதப் படைகளில் ஒருங்கிணைப்பதற்கான உத்திசார் ஆவணம் இது. குவாண்டம் தகவல்தொடர்பு, குவாண்டம் கணினி, குவாண்டம் உணர்வி மற்றும் அளவியல் (metrology), குவாண்டம் பொருட்கள் மற்றும் சாதனங்கள் என நான்கு துறைகளை இது உள்ளடக்குகிறது. பாதுகாப்பான தகவல்தொடர்பு, மேம்பட்ட உணர்திறன் மற்றும் எதிர்காலப் போர்க்களத் தயார்நிலைக்காக, குடிமை-இராணுவ இணைவு (civil-military fusion) அணுகுமுறை மூலம் பாதுகாப்புத் தேவைகளைத் தேசிய குவாண்டம் இயக்கத்துடன் (National Quantum Mission) இது ஒருங்கிணைக்கிறது.