அறிவிப்புகள்
Tamil Test
Tamil Test Plus Plus திட்டங்களைப் பார்க்க
உள்நுழை இலவசப் பதிவு

குறைந்தது 2 எழுத்துகளைத் தட்டச்சு செய்யவும்.

பிரபலமான தேடல்கள்

பிரபலமான வினாடி வினாக்கள்

சுற்றுச்சூழல் 1 நிமிட வாசிப்பு

வலசைப் பறவைகள் பாதுகாப்புக்கு 'மத்திய ஆசிய பறப்புப் பாதை டிஜிட்டல் மையம்' தொடக்கம்

சேமி

வலசைப் பறவைகளின் பாதுகாப்புக்கு உதவும் வகையில், மத்திய ஆசிய பாதுகாப்பு வலையமைப்பு (CACN) 'மத்திய ஆசிய பறப்புப் பாதை டிஜிட்டல் மையம்' (Central Asian Flyway Digital Hub) என்ற இணையத் தளத்தைத் தொடங்கியுள்ளது. இம்மையம் பறவை இனங்கள், முக்கிய வலசை இடங்கள், பாதுகாப்புத் திட்டங்கள், கல்விசார் வளங்கள் குறித்த தகவல்களைப் பகிர்கிறது. உள்கட்டமைப்புகளில் மோதிப் பறவைகள் இறப்பது, காயமடைவது குறித்துப் பதிவு செய்ய 'பறவை மோதல் அறிக்கை இணையதளம்' (Bird Collision Reporting Portal) இதில் உள்ளது. அடையாளக் குறியிடப்பட்ட பறவைகளைக் காணும்போது பதிவு செய்து, அவற்றின் வலசைப் பாதைகளைப் புரிந்துகொள்ள 'வளையமிடல் மற்றும் மறுகாணல் இணையதளம்' (Ringing and Resighting Portal) உதவுகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், உள்ளூர் சமூகங்கள், பறவை ஆர்வலர்களுக்கான விழிப்புணர்வுப் பொருட்களையும் இம்மையம் வழங்குகிறது; இதன் மூலம் பறப்புப் பாதையில் பறவைகளைக் கண்காணித்துப் பாதுகாக்கும் பணியில் அதிகமானோர் பங்கேற்க முடியும்.