காலநிலை மற்றும் தூய காற்றுக் கூட்டணி (CCAC), 'குப்பைக்கிடங்குகளிலிருந்து மீத்தேன் உமிழ்வைக் குறைத்தல்: உயிர்மூடி அமைப்புகளின் ஆற்றல்' (Reducing Methane Emissions from Landfills: The potential of biocover systems) என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. உயிர்மூடிகள் (biocovers) என்பவை இயற்கையாக உள்ள பாக்டீரியாக்கள் மீத்தேனைத் தீங்கு குறைந்த கார்பன் டை ஆக்சைடாகவும் நீராகவும் மாற்றும் நுண்ணுயிர் அடுக்குகளாகும். நீண்டகாலத்தில் குப்பைக்கிடங்கு மீத்தேன் உமிழ்வை 50% வரை இவை குறைக்கும் என்றும், காற்றின் தரத்தையும் பொது சுகாதாரத்தையும் மேம்படுத்தும் என்றும் அறிக்கை கூறுகிறது. உலக அளவில் மனிதச் செயல்பாடுகளால் வெளியாகும் மீத்தேனில் சுமார் 11% குப்பைக்கிடங்குகளிலிருந்து வருகிறது; மீத்தேன் மிக அதிகப் புவி வெப்பமயமாக்கும் ஆற்றல் கொண்ட வாயுவாகும்.