முக்கியக் கனிமங்களின் உள்நாட்டுப் பதப்படுத்தலை ஊக்குவித்து இறக்குமதிச் சார்பைக் குறைக்க, ₹2,814 கோடி மூலதனச் செலவு (Capex) ஆதரவுத் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது; இது 2026–27 முதல் 2030–31 வரை செயல்படும். குறைந்தபட்சம் 30 கிலோடன் திறன் கொண்ட இரண்டு லித்தியம் ஆலைகள், குறைந்தபட்சம் 50 கிலோடன் திறன் கொண்ட இரண்டு நிக்கல் ஆலைகள் என நான்கு ஆலைகள் இலக்கு; நிக்கல் பதப்படுத்தலின் துணைப் பொருளாக கோபால்ட்டும் மீட்கப்படும். தகுதியான முதலீட்டில் 30% மூலதன மானியம் வழங்கப்படும்; அதிகபட்சம் லித்தியம் பயனாளிக்கு ₹500 கோடி, நிக்கல் பயனாளிக்கு ₹900 கோடி. மின்சார வாகனங்கள், பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS), மின்னணுவியல், பாதுகாப்பு, சிறப்பு எஃகு ஆகிய துறைகளுக்கு இத்திட்டம் உதவும்.