ஹரியானா இறகுப்பந்து வீராங்கனை தேவிகா சிஹாக், தாய்லாந்து மாஸ்டர்ஸ் 2026-இல் தனது முதல் BWF சூப்பர் 300 பட்டத்தை வென்றார். பாதுகாப்புத் துறையில், 1970-களில் சேர்க்கப்பட்ட பெச்சோரா தரையிலிருந்து வான் நோக்கிப் பாயும் ஏவுகணை அமைப்பை, வான் பாதுகாப்புத் திறனை உயர்த்தும் வகையில் இந்திய விமானப்படை முழுமையாக எண்மமயமாக்கியுள்ளது (digitised). மேலும், துபாயில் நடைபெற்ற கல்ஃபுட் 2026-இல் இந்தியா முதன்முறையாகக் 'கூட்டாளி நாடாக' (Partner Country) பங்கேற்றது; APEDA இந்தியக் குழுவுக்குத் தலைமை தாங்கியது.