AMRUT மற்றும் AMRUT 2.0 திட்டங்களின் கீழ், நகர்ப்புறக் குழாய்க் குடிநீர் வசதி 2011-இல் 49%-இலிருந்து 2026-இல் சுமார் 77% ஆக உயர்ந்துள்ளது; இது 64% அதிகரிப்பு. இவ்வியக்கங்கள் 228 லட்சம் வீட்டுக் குழாய் இணைப்புகளையும் 20 லட்சம் கழிவுநீர் இணைப்புகளையும் வழங்கியுள்ளன; 7,480 ஏக்கர் நீர்நிலைகள் புத்துயிர் பெற்றன; 2,704 ஏக்கர் பசுமைப் பகுதிகள் உருவாக்கப்பட்டன. இயக்கம் மற்றும் பராமரிப்பு உட்பட ₹1.89 லட்சம் கோடி மதிப்பிலான சுமார் 9,000 திட்டங்கள் AMRUT 2.0-இன் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளன. AMRUT மித்ரா மூலம் 28,000-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் நீர் மேலாண்மைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.