இந்தியாவின் டிஜிட்டல் சுகாதாரச் சூழலை வலுப்படுத்த, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் (ABDM) கீழ் ஒருங்கிணைந்த சுகாதார இடைமுகத்தை (UHI) தேசிய சுகாதார ஆணையம் (NHA) விரிவுபடுத்தி வருகிறது. UHI என்பது பல்வேறு டிஜிட்டல் சுகாதாரச் செயலிகள் வழியாக நோயாளிகளையும் சுகாதார சேவை வழங்குநர்களையும் இணைக்கும் ஒரு திறந்த நெறிமுறை (open protocol) ஆகும்.