இந்தியச் சர்வதேச நீர் வாரத்தின் (IIWW-2026) 9-வது பதிப்பு புது தில்லியில் தொடங்கி வைக்கப்பட்டது. ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு, நீர் சேமிப்பு மற்றும் காலநிலை தொடர்பான நீர்ச் சவால்களை எதிர்கொள்வதற்கான உலகளாவிய ஒத்துழைப்பையும் புதுமையான தீர்வுகளையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பதிப்பின் கருப்பொருள் ‘Climate Resilient Water Management’ (காலநிலை மீள்திறன் கொண்ட நீர் மேலாண்மை) என்பதாகும். கொள்கை வகுப்பாளர்கள், நிபுணர்கள், தொழில்துறையினர் ஆகியோர் நிலையான நீர் மேலாண்மை குறித்துக் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் தளமாக இது விளங்குகிறது.