கடந்த பத்தாண்டுகளில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் பதவியிலுள்ள நீதிபதிகளுக்கு எதிராக, ஊழல், பாலியல் தவறான நடத்தை, பிற கடுமையான முறைகேடுகள் போன்ற குற்றச்சாட்டுகளுடன் 8,630 புகார்கள் பெறப்பட்டதாக ஒன்றிய அரசு மக்களவையில் தெரிவித்தது. இவை இந்தியத் தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளால் 'உள்ளக நடைமுறை' மூலம் கையாளப்படுகின்றன. CPGRAMS (மையப்படுத்தப்பட்ட பொதுக் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு) வழியாகப் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட நீதித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகின்றன.