2027-இல் இந்தியா–ஜப்பான் தூதரக உறவுகளின் 75-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், “Shared Horizons” (பகிரப்பட்ட தொடுவானங்கள்) என்ற வாசகத்துடன் கூடிய கூட்டு நினைவு இலச்சினையை இரு நாடுகளும் 2026 நவம்பர் 19 அன்று வெளியிட்டன. 2027-ஆம் ஆண்டு இந்தியா–ஜப்பான் பகிரப்பட்ட தொடுவானங்கள் ஆண்டாக (India-Japan Year of Shared Horizons) கொண்டாடப்படும். அமைதி ஒப்பந்தம் (Treaty of Peace) நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, 1952 ஏப்ரல் 28 அன்று இந்தியாவும் ஜப்பானும் தூதரக உறவுகளை ஏற்படுத்தின. இந்த இலச்சினையில், '7' என்ற எண்ணில் இந்திய அலங்கார வடிவங்களும், '5' என்ற எண்ணில் ஜப்பானின் உதய சூரியனும் செய்கைஹா (Seigaiha) அலைகளும், சூரியனையே சுடராகக் கொண்ட அகல் விளக்கும், பகிரப்பட்ட தொடுவானத்தைக் குறிக்கும் இரண்டு பாயும் ரிப்பன்களும், இந்தியாவைக் குறிக்கும் தாமரையும் இடம்பெற்றுள்ளன. இந்திய வணிகத் தொகுப்புகளுக்கும் ஜப்பானிய பிராந்திய வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கும் இடையிலான வணிகத் தொடர்புகளை Business Connect-75 வலுப்படுத்தும். LUPEX (நிலவு துருவ ஆய்வு) திட்டம் உள்ளிட்ட அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க ஒத்துழைப்பை MIRAI-VIGYAN-75 ஊக்குவிக்கும். இந்திய மாநிலங்களுக்கும் ஜப்பானிய மாகாணங்களுக்கும் இடையிலான கூட்டாண்மையை Empower Regional Linkage-75 வலுப்படுத்தும்.