இந்தியாவின் முதல் பனிச்சிறுத்தை எண்ணிக்கை மதிப்பீடு (Snow Leopard Population Assessment in India - SPAI), இந்திய இமயமலைப் பகுதியில் 718 பனிச்சிறுத்தைகள் உள்ளதாக மதிப்பிட்டுள்ளது. இவற்றில் 477 லடாக்கில் உள்ளன. பனிச்சிறுத்தை (Panthera uncia) IUCN சிவப்புப் பட்டியலில் பாதிக்கப்படக்கூடிய இனம் (Vulnerable - VU) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.