பாதுகாப்பு உற்பத்தித் துறை (DDP), ₹3,070 கோடி மதிப்பிலான வணிக வாய்ப்புள்ள, உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த 405 பொருள்களைக் கொண்ட 6-ஆவது நேர்மறை உள்நாட்டுமயமாக்கல் பட்டியலை (PIL) அறிவித்துள்ளது. இவற்றில் 389 பொருள்கள் பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் (DPSUs), 16 இந்தியக் கடலோரக் காவல்படைக்கும் (ICG) உரியவை. Su-30MKI, இலகு போர் விமானம் (LCA), T-72, T-90 பீரங்கிகள், போர்க்கப்பல்கள் போன்றவற்றில் பயன்படும் மாற்றக்கூடிய அலகுகள் (LRUs), துணை அமைப்புகள், உதிரிபாகங்கள், கூறுகள், மூலப்பொருள்கள் இதில் அடங்கும். ‘மேக்’ நடைமுறைகள் மற்றும் உள்ளக ஆராய்ச்சி-மேம்பாடு (R&D) மூலம் உள்நாட்டில் உருவாக்கப்பட்டு, இந்திய விற்பனையாளர்களிடமிருந்து, குறிப்பாக MSMEs மற்றும் புத்தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும். விவரங்கள் 2020 ஆகஸ்டில் தொடங்கப்பட்ட SRIJAN பாதுகாப்பு இணையதளத்தில் உள்ளன.