2026 ஏப்ரல் 26 அன்று செர்னோபில் அணு விபத்தின் 40-வது ஆண்டு நினைவு அனுசரிக்கப்பட்டது. 1986-இல் செர்னோபில் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பால் கதிரியக்கத் துகள்கள் காற்றில் கலந்தன; அவை தூசி, புகை வடிவில் ஐரோப்பா முழுவதும் பரவி நிலம், நீர், உயிரினங்களை மாசுபடுத்தின; புற்றுநோய் போன்ற கதிர்வீச்சு சார்ந்த நோய்களின் அபாயத்துக்கு மில்லியன் கணக்கான மக்கள் ஆளாயினர். அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதி விலக்கு மண்டலமாக (exclusion zone) மாறியது; அந்த இடம் தற்போது ‘New Safe Confinement’ என்ற பாதுகாப்புக் கட்டமைப்பால் மூடப்பட்டுள்ளது. ரஷ்யா–உக்ரைன் போரின்போது உக்ரைனின் ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் அருகே ஏற்பட்ட சேதம் அணுப் பாதுகாப்பு குறித்த அச்சங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.