தென் மண்டலக் குழுவின் 31வது கூட்டத்தை ஆகஸ்ட் 2026-இல் மாமல்லபுரத்தில் தமிழ்நாடு நடத்தவுள்ளது. தென் மண்டலக் குழு என்பது மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம், 1956-இன் கீழ் அமைக்கப்பட்ட சட்டப்பூர்வ அமைப்பாகும். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசமும் இதன் உறுப்பினர்கள். மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகள், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, வளர்ச்சி போன்ற பொதுவான விவகாரங்களை ஒன்றிய அரசும் ஒரு பிராந்தியத்தின் மாநிலங்களும் விவாதிக்கும் தளத்தை மண்டலக் குழுக்கள் வழங்குகின்றன; இது கூட்டுறவுக் கூட்டாட்சியை வளர்க்க உதவுகிறது.