இந்திய இராணுவத்தின் பிராந்திய இராணுவம் (Territorial Army - TA), சைபர்பீஸ் (CyberPeace) அமைப்புடன் இணைந்து 'டெரியர் சைபர் குவெஸ்ட்' (TCQ 3.0) மூன்றாவது பதிப்பைத் தொடங்கியுள்ளது. உள்நாட்டு இணையப் பாதுகாப்புத் தீர்வுகளை உருவாக்கவும், இந்தியாவின் இணையப் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தவும் நடத்தப்படும் தேசிய அளவிலான பாதுகாப்பு ஹேக்கத்தான் இது.