28ஆவது காமன்வெல்த் அரசுத் தலைவர்கள் மாநாடு (CHOGM) 2026 நவம்பர் 4 அன்று ஆன்டிகுவா மற்றும் பார்புடாவின் செயின்ட் ஜான்ஸ் நகரில் நிறைவடைந்தது. ‘வளமான காமன்வெல்த்துக்கான கூட்டாண்மைகளையும் முதலீட்டையும் விரைவுபடுத்துதல்’ (Accelerating Partnerships and Investment for a Prosperous Commonwealth) என்பது இதன் கருப்பொருள். காலநிலை மீள்திறன், நிலையான வளர்ச்சி, புத்தாக்கம், சமத்துவம், வர்த்தகம், முதலீடு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இளைஞர் திறன் மேம்பாடு, வர்த்தகம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்காக சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான புதிய உறுதிமொழிகள் திரட்டப்பட்டன. உறுப்பு நாடுகளின் பொருட்கள், சேவைகள், வர்த்தக வாய்ப்புகள் பற்றிய தகவல்களை வழங்கும் காமன்வெல்த் வர்த்தக இணையதளமும் (Commonwealth Trade Portal) தொடங்கப்பட்டது; இது குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) பயனளிக்கும்.