நிலையான எதிர்காலத்துக்காகப் பல்லுயிர், இயற்கை வளங்கள், சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூலை 28 அன்று உலக இயற்கைப் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நிலையான நடைமுறைகள் மூலம் காடுகள், வனவிலங்குகள், நீர், மண் ஆகியவற்றின் பாதுகாப்பை இந்நாள் ஊக்குவிக்கிறது; அழிந்துவரும் உயிரினங்களையும் அவற்றின் வாழிடங்களையும் காக்கும் உலகளாவிய முயற்சிகளையும் ஆதரிக்கிறது. 2030-க்குள் பல்லுயிர் இழப்பைத் தடுத்து மீட்டெடுக்க முயலும் குன்மிங்-மாண்ட்ரியல் உலகளாவிய பல்லுயிர்க் கட்டமைப்புடன் (GBF) இந்நாள் இணைந்துள்ளது. தூய காற்று, தூய நீர், உணவுப் பாதுகாப்பு, காலநிலை நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு ஆரோக்கியமான சூழல் அமைப்புகள் இன்றியமையாதவை என்பதையும் இது வலியுறுத்துகிறது.