நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் துணை நிகழ்வில், 2030-க்குள் ஹெபடைடிஸ் B மற்றும் C-ஐ பொதுச் சுகாதார அச்சுறுத்தல்களாக இல்லாமல் ஒழிக்கும் தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியது. வைரஸ் கல்லீரல் அழற்சிக்கான தடுப்பு, பரிசோதனை, நோயறிதல், சிகிச்சை, பராமரிப்பை இந்தியா வலுப்படுத்தி வருகிறது. ஹெபடைடிஸ் B தடுப்பூசி, கர்ப்பகாலப் பரிசோதனை, இலவச நோயறிதல் மற்றும் சிகிச்சை, பாதுகாப்பான இரத்தமேற்றும் சேவைகள், ஊசி மூலம் போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு ஆலோசனை மற்றும் மறுவாழ்வு ஆகியவை இதில் அடங்கும். 2030 இலக்கை அடைய உலகளாவிய ஒத்துழைப்பும், தடுப்பு, பரிசோதனை, சிகிச்சைக்குச் சம அணுகலும் தேவை என இந்தியா வலியுறுத்தியது.