தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட 3 கோடி இலக்கை முன்கூட்டியே எட்டியதால், மார்ச் 2029-க்குள் 6 கோடி பெண்கள் என லக்பதி தீதி இலக்கை ஒன்றிய அரசு இரட்டிப்பாக்கியுள்ளது. சுய உதவிக் குழு உறுப்பினர்கள் வாழ்வாதாரச் செயல்பாடுகள் மூலம் ஆண்டுக்கு குறைந்தது ₹1 லட்சம் ஈட்ட இத்திட்டம் உதவுகிறது. மேலும், சுய உதவிக் குழுப் பொருட்களுக்கு நாடு முழுவதும் சிறந்த சந்தை வாய்ப்பை வழங்கி, கிராமப்புறப் பெண்களின் தொழில்முனைவை ஊக்குவிக்க SHE-Marts (சுய உதவித் தொழில்முனைவோர் அங்காடிகள்) அமைக்கப்படும் என ஒன்றிய வரவு-செலவுத் திட்டம் 2026–27 அறிவித்தது.