ஒன்றிய உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, 2027க்குள் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் வெளிநாட்டவர் மண்டலப் பதிவு அலுவலகங்களை (FRROs) அமைக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் (MHA) திட்டமிட்டுள்ளது. 2025 முதல் ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்), சண்டிகர், குவாஹாத்தி (அசாம்), ஐஸ்வால் (மிசோரம்), அமராவதி (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய இடங்களில் ஐந்து புதிய FRROக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோஹிமா (நாகாலாந்து), அகர்தலா (திரிபுரா), புவனேஸ்வர் (ஒடிசா) ஆகிய இடங்களில் மேலும் மூன்று FRROக்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன; இதனால் மொத்த எண்ணிக்கை 20ஆக உயர்கிறது. குடியேற்றம் மற்றும் தூதரகச் சேவைகளை எளிதில் அணுகச் செய்தல், ஒழுங்குமுறை இணக்கத்தை வலுப்படுத்துதல், சர்வதேசப் பார்வையாளர்களை ஈர்த்தல் ஆகியவை இவ்விரிவாக்கத்தின் நோக்கங்கள். சுற்றுலா, மருத்துவ சிகிச்சை, கல்வி ஆகியவற்றுக்காக இந்தியா வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை இந்நடவடிக்கை கருத்தில் கொள்கிறது.