IndiaAI இயக்கத்தின் கீழ், ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), உலக வங்கிக் குழுமத்தின் 'உலக வளர்ச்சி அறிக்கை (WDR) 2026: செயற்கை நுண்ணறிவின் வாக்குறுதி' (The Promise of Artificial Intelligence) என்ற அறிக்கையை வெளியிட்டது. ஆறு மாதங்களுக்குள் ChatGPT-யின் 50% பயன்பாடு நடுத்தர வருமான நாடுகளிலிருந்து வந்ததாகவும், மின்சாரம், இணையம் போன்ற முந்தைய தொழில்நுட்பங்களை விட AI வேகமாகப் பரவுவதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது. திறன்கள் (Capabilities), செறிவு (Concentration), நிரப்பிகள் (Complements) எனும் AI வளர்ச்சியின் 'மூன்று C'-களை அது முன்வைக்கிறது. குறிப்பிட்ட தேவைகளுக்கான குறைந்த கணினித் திறன் கொண்ட சிறிய மாதிரிகளான 'சிறு AI'-க்கு எடுத்துக்காட்டாக, இந்தியாவின் வாத்வானி AI-யின் 'Cough Against TB', கானாவின் 'Rori' கற்றல் தளம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. தெலங்கானாவில் AI அடிப்படையிலான வானிலை முன்னறிவிப்புகள் ஒவ்வொரு சிறு விவசாயிக்கும் 560 அமெரிக்க டாலர் வரை சேமிப்பை அளித்தன. 'ஏற்றுக்கொள், தகவமை, முன்னேறு' (Adopt, Adapt and Advance) அணுகுமுறையை அறிக்கை பரிந்துரைக்கிறது.