அறிவிப்புகள்
Tamil Test
Tamil Test Plus Plus திட்டங்களைப் பார்க்க
உள்நுழை இலவசப் பதிவு

குறைந்தது 2 எழுத்துகளைத் தட்டச்சு செய்யவும்.

பிரபலமான தேடல்கள்

பிரபலமான வினாடி வினாக்கள்

தேசியம் 1 நிமிட வாசிப்பு

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் 2026: 'வலிமையான பஞ்சாயத்து, முழுமையான வளர்ச்சி'!

சேமி

மக்களாட்சியின் அடித்தளம்: 73-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24 அன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. 1992-ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க 73-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 1993 ஏப்ரல் 24 முதல் நடைமுறைக்கு வந்ததன் நினைவாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


2026 மையக்கருத்து: வலிமையான பஞ்சாயத்து, முழுமையான வளர்ச்சி


2026-ஆம் ஆண்டிற்கான மையக்கருத்து "Sashakt Panchayat, Sarvangeen Vikas" (வலிமையான பஞ்சாயத்து, முழுமையான வளர்ச்சி) என்பதாகும். e-GramSwaraj போன்ற டிஜிட்டல் தளங்கள் மூலம் கிராம அளவில் நிர்வாகத்தைத் துரிதப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.


மூன்று அடுக்கு முறை


  • கிராம பஞ்சாயத்து: கிராம அளவு.

  • பஞ்சாயத்து ஒன்றியம்: ஒன்றிய/வட்டார அளவு.

  • மாவட்ட ஊரட்சி: மாவட்ட அளவு.

இச்சட்டம் பெண்களுக்கு குறைந்தபட்சம் 1/3 இடஒதுக்கீட்டை உறுதி செய்கிறது. டிஎன்பிஎஸ்சி (TNPSC) மாணவர்கள் 'இந்திய ஆட்சியியல் - உள்ளாட்சி அரசாங்கம்' பாடப்பகுதிகளுக்காக இத்தினத்தை மிக முக்கியமாகக் குறித்துக் கொள்ள வேண்டும்.