கர்நாடகாவைச் சேர்ந்த பீபி பாத்திமா சுய உதவிக் குழு (SHG) மற்றும் விவசாயி ஈஸ்வரகவுடா பாட்டீல் ஆகியோருக்கு, புது தில்லியில் 2026 தாவர மரபணு பாதுகாவலர் விருதுகள் (Plant Genome Saviour Awards) வழங்கப்பட்டன. பாரம்பரிய விதைகளைப் பாதுகாத்ததற்காக பீபி பாத்திமா சுய உதவிக் குழுவுக்கு ₹10 லட்சம் பரிசுத் தொகையுடன் தாவர மரபணு பாதுகாவலர் சமூக விருது (Plant Genome Saviour Community Award) வழங்கப்பட்டது. ஈஸ்வரகவுடா பாட்டீல், பனிவரகு (Proso Millet - Baragu) மற்றும் பிரவுன் டாப் சிறுதானியம் (Brown Top Millet - Korale) ஆகிய இரண்டு பாரம்பரிய சிறுதானிய வகைகளை மீட்டெடுத்ததற்காகக் கௌரவிக்கப்பட்டார்.