16-வது நிதிக் குழு, சிறப்பு உள்கட்டமைப்பு மற்றும் நகரமயமாக்கல் மானியங்கள் தவிர, 2026-31 காலத்துக்குத் தமிழ்நாட்டின் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு (ULB) ₹27,000 கோடிக்கு மேல் பரிந்துரைத்துள்ளது. 2026-27 முதல் ₹20,054 கோடி அடிப்படை மானியம் விடுவிக்கப்படும். ULB செயல்திறன் மானியம், மாநிலச் செயல்திறன் மானியம் தலா ₹2,507.50 கோடி; இவை நிபந்தனைகளுக்கு உட்பட்டு 2027-28 முதல் விடுவிக்கப்படும். சிறப்பு உள்கட்டமைப்புப் பிரிவின் கீழ் கோயம்புத்தூர், மதுரை மாநகராட்சிகள் தலா ₹3,500 கோடி வரையிலான திட்டங்களை மேற்கொள்ளலாம். 2011 மக்கள்தொகை அடிப்படையில் ₹2,000 கோடி ஒருமுறை நகரமயமாக்கல் ஊக்கத்தொகை, புறநகர் கிராமங்களை அருகிலுள்ள உள்ளாட்சிகளுடன் இணைக்க உதவும். தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் காலநிலை தாங்கும் உள்கட்டமைப்புக்கு ₹791 கோடி சிறப்பு மானியமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.