குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டுக் குழுக்கள் (LAHDC) (திருத்த) ஒழுங்குமுறை, 2026-ஐப் பிறப்பித்துள்ளார். இதன் மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட சங்கூ மாவட்டம் உட்பட லடாக்கின் எட்டு மாவட்டங்களிலும் மலைக் குழுத் தேர்தல்கள் நடத்த வழி ஏற்பட்டுள்ளது. இத்திருத்தங்களுக்கு 2026 அக்டோபர் 14 அன்று ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஒவ்வொரு குழுவிலும் இருந்த 26 தொகுதிகள், இனி குறைந்தபட்சம் 7 முதல் அதிகபட்சம் 24 வரை மாற்றப்படுகின்றன. உள்ளாட்சியில் பங்கேற்பை அதிகரிக்கப் பெண்கள் மற்றும் பிரதிநிதித்துவம் இல்லாத சமூகங்களிலிருந்து நான்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். 2019இல் முந்தைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு லடாக் ஒன்றியப் பிரதேசமானது; முன்பு லே, கார்கில் ஆகிய இரண்டு மலைக் குழுக்கள் மட்டுமே இருந்தன.