இந்திய ராணுவமும் அமெரிக்க ராணுவமும் இணைந்து நடத்தும் சிறப்புப் படைகளின் கூட்டுப் பயிற்சியான 'வஜ்ர பிரஹார்'-ன் 16-வது பதிப்பு, இமாச்சலப் பிரதேசத்தின் பக்லோவில் 2026 பிப்ரவரி 23 முதல் மார்ச் 15 வரை நடைபெறுகிறது. மலைப்பகுதிகளில் சிறப்பு நடவடிக்கைகள், பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்படும் திறனை மேம்படுத்துவதும் அனுபவங்களைப் பகிர்வதும் இதன் நோக்கம். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் மாறி மாறி நடத்தப்படும் வஜ்ர பிரஹார், இரு ராணுவங்களுக்கிடையிலான முக்கிய இருதரப்பு ராணுவ ஈடுபாடுகளில் ஒன்றாகும்.