இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கியோருக்கான 2025-26 நம்மாழ்வார் விருதுகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் சி. நல்லசிவம் (நாமக்கல்), ஏ. சுப்பிரமணியன் (புதுக்கோட்டை), சாதனா (செங்கல்பட்டு) ஆகியோருக்கு வழங்கினார்; ஒவ்வொருவருக்கும் ₹2 லட்சம் பரிசும் பதக்கமும் வழங்கப்பட்டன. மறைந்த தலைமையாசிரியர் பி.எஸ். கௌரிசங்கர் ராஜாவுக்கு மரணத்துக்குப் பின் வழங்கப்பட்ட சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக் 2025 விருதை அவரது மனைவி ஸ்ரீஷாவிடம் முதலமைச்சர் வழங்கினார். வேளாண் பண்ணைக் குட்டையில் இருந்து எட்டு வயது மாணவரைக் காப்பாற்ற முயன்ற துணிச்சலுக்காக அவர் கௌரவிக்கப்பட்டார்.