ஜார்ஜ்டவுன் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு நிறுவனமும் ஓஸ்லோ அமைதி ஆராய்ச்சி நிறுவனமும் வெளியிட்ட பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்புக் குறியீடு 2025-26-இல், 181 நாடுகளில் 0.607 மதிப்பெண்ணுடன் இந்தியா 131-ஆம் இடத்தில் உள்ளது. 0.939 மதிப்பெண்ணுடன் டென்மார்க் முதலிடம்; அடுத்து ஐஸ்லாந்து, நார்வே. அமெரிக்கா 31-ஆம் இடம்; 0.279 மதிப்பெண்ணுடன் ஆப்கானிஸ்தான் கடைசி இடம். 2017-இல் முதன்முதலில் தொடங்கப்பட்ட இக்குறியீடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது.