மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மின்சார இயக்க இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தை அளவிடும் இந்திய மின்சார இயக்க குறியீடு (IEMI) 2025-இன் இரண்டாம் பதிப்பை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. இதில் டெல்லி முதலிடம் பிடித்தது; மகாராஷ்டிரா, கர்நாடகா, சண்டிகர், கோவா அடுத்தடுத்த இடங்களைப் பெற்றன. போக்குவரத்து மின்மயமாக்கல், மின்னேற்ற உள்கட்டமைப்பு, மின்சார வாகன (EV) ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் என்ற மூன்று கருப்பொருள்களின் கீழ் 16 குறிகாட்டிகளைக் கொண்டு 100-க்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது. அதிகபட்ச மதிப்பெண் 2024-இல் 77-இலிருந்து 2025-இல் 84 ஆக உயர்ந்தது.