சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் சிந்தனைக் குழாம்களுக்கான சர்வதேசக் கருத்தரங்கில் 'உலகச் சுற்றுச்சூழல் சிந்தனைக் குழாம் வளர்ச்சி அறிக்கை 2025' வெளியிடப்பட்டது. 97 நாடுகளில் உள்ள 886 சுற்றுச்சூழல் சிந்தனைக் குழாம்களை (think tanks) இது பட்டியலிட்டு, அவற்றின் ஆய்வுத் திறனையும் சுற்றுச்சூழல் நிர்வாகத்துக்கான பங்களிப்பையும் ஆராய்கிறது. இவற்றில் 499 குழாம்கள் 26 வளர்ந்த நாடுகளிலும், 387 குழாம்கள் 71 வளரும் நாடுகளிலும் உள்ளன. புது தில்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE) உலகின் முதல் 100 சுற்றுச்சூழல் சிந்தனைக் குழாம்களில் இடம்பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடு, பல்லுயிர் மற்றும் சூழல் அமைப்புகள், நிலையான வளர்ச்சி ஆகிய மூன்று பிரிவுகளில் முதல் 50-இலும் CSE உள்ளது. நிதி, நிறுவன வலிமை, ஆய்வுத் திறன் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளையும், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட ஆய்வின் தேவையையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.