மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில், 2024–25 வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் (FY25 BE) தில்லி 93.2% என்ற அதிகபட்ச சொந்த வருவாய்ப் பங்கைப் பதிவு செய்தது. ஹரியானா 80.4%-உடன் இரண்டாமிடமும், தெலங்கானா 78.4%-உடன் மூன்றாமிடமும் பெற்றன. கர்நாடகா 77.3%-உடன் நான்காமிடமும், தமிழ்நாடு 75.5%-உடன் ஐந்தாமிடமும் பெற்றன. மணிப்பூர் 10% என்ற மிகக் குறைந்த பங்கைப் பதிவு செய்தது. ஒரு மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகளில் அதன் வரி மற்றும் வரி அல்லாத வருவாயின் பங்கே சொந்த வருவாய் எனப்படும்.