தற்போதுள்ள தனியார் அல்லது அரசு உதவிபெறும் கல்லூரிகளை ‘பிரவுன்ஃபீல்டு பல்கலைக்கழகங்களாக’ மாற்றவும், குறைந்தபட்ச நிலத் தேவையை 100 ஏக்கரிலிருந்து மாநகராட்சிப் பகுதிகளில் 25 ஏக்கர், நகராட்சிகள் அல்லது பேரூராட்சிகளில் 35 ஏக்கர், பிற இடங்களில் 50 ஏக்கர் எனக் குறைக்கவும் முன்மொழிந்த தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா, 2025-ஐத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது. 2023 திருத்த மசோதாவும் திரும்பப் பெறப்பட்டது. அதே கூட்டத்தொடரில், ஒதுக்கீட்டு (முன்பண மானிய) மசோதாவையும் நிதிப் பொறுப்பு (திருத்த) மசோதாவையும் சட்டப்பேரவை நிறைவேற்றியது.