ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள பீம்மண்டலி சூழல் பாரம்பரியத் தலத்தை (Bhimmandali Eco Heritage Site) ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திறந்து வைத்தார். நக்திதேயுல் வனச்சரகத்தில் அமைந்துள்ள இத்தலத்தில் 20,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான பாறை ஓவியங்களும் கல்வெட்டுகளும் உள்ளன. பழைய கற்காலம் முதல் புதிய கற்காலம் வரை ஆதி மனிதர்கள் இங்கு வாழ்ந்ததற்கான சான்றுகளை இவை காட்டுகின்றன. இந்த வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல் எச்சங்களைப் பாதுகாப்பதும் ஒடிசாவில் சூழல் சுற்றுலாவை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். பீம்மண்டலி மகாபாரதத்தின் பீமனுடன் தொடர்புடையது; இங்கு சிவபெருமான், பார்வதி தேவி ஆகியோர் குப்தேஸ்வர் என்ற வடிவில் வழிபடப்படும் தலங்களும் உள்ளன.